இலங்கைக்கு எதிரான 3வது ரி20 போட்டியில் 3 விக்கெட் வித்தியாத்தில் வெற்றியீட்டிய மேற்கிந்தியத்தீவுகள் அணி, 2-1 என தொடரை வென்றது.
இன்று கூலிட்ஜ் மைதானத்தில் நடந்த போட்டியில், நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
இலங்கையின் பெரும்பாலான வீரர்கள் மந்தமாக ஆடியதுடன், சொற்ப ஓட்டங்களையே பெற்றனர். தொடக்க வீரர்கள் தனுஷ்க குணதிலக 9, பதும் நிஷங்க 5, நிரோஷன் டிக்வெல்ல 4, மத்யூஸ் 11 பெற்றனர். ஆட்டமிழக்காமல் சந்திமல் 46 பந்துகளில் 54 ஓட்டங்களையும், அசேன் பண்டார 35 பந்துகளில் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.
20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ஓட்டத்தை இலங்கை பெற்றது.
பதிலளித்தாடிய மேற்கிந்தியத்தீவுகள், 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களை பெற்றது.
லென்டி சிமென் 26, நிக்கோலஸ் பூரான் 23 ஓட்டங்களை பெற்றனர்.
லக்ஸன் சந்தகன் 29 ஓட்டங்களிற்கு 3 விக்கெட், துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அகில தனஞ்ஜய 4 ஓவர்களில் 53 ஓட்டங்கள் சாத்துப்படி வாங்கினார்.
ஆட்டநாயகன் மேற்கிந்தியத்தீவுகளின் பவியன் அலென்.