26.3 C
Jaffna
December 19, 2024
Pagetamil
இலங்கை

வவுனியாவில் திடீரென உயிரிழந்த 28 வயது இளைஞனிற்கு கொரோனா!

வவுனியாவில் மரணமடைந்த இருவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் வசிக்கும் 28 வயது இளைஞன் ஒருவர் திடீரென உடல் சுகவீனமுற்ற நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த இளைஞனுக்கு மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா, புளியங்குளம் வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட 55 வயதுடைய நபரொருவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வவுனியா வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்ட போது அவர் மரணமடைந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியாவில் கோவிட் காரணமாக இரு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதராப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பாதிப்பு

Pagetamil

கடற்றொழிலாளர் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன?: டக்ளஸ் கேள்வி!

Pagetamil

முன்னாள் ஜனாதிபதிவின் நன்கொடை

east tamil

எலிக்காய்ச்சலால் வளர்ப்பு மிருகங்களும் பாதிக்கப்படலாம்!

Pagetamil

முள்ளிவாய்க்காலில் 103 ரோஹிங்கியா அகதிகளுடன் கரையொதுங்கிய படகு!

east tamil

Leave a Comment