முல்லைத்தீவு நாயாற்று கடல் நீர் ஏரியில் இன்று (07) ஞாயிற்றுக்கிழமை காலை குளிக்க சென்றவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்
வவுனியாவிலிருந்து சென்ற நண்பர்கள் நாயாற்று கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் நால்வர் நீரில் அடித்து செல்லப்பட்டனர். பெரும் முயற்சி செய்து மூவர் கரை ஏறினார்கள். ஒருவர் காணாமல் போனார்.
காணாமல் போனவரை தேடும் பணி சுமார் மூன்று மணிநேரம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, காணாமல் போனவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் வவுனியா, மரக்காரம்பளைiய சேர்ந்த கருணாரத்தினம் யேசாந்தன் (29) ஆவார்.
சடலம் மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1