26.2 C
Jaffna
January 21, 2025
Pagetamil
உலகம்

கோவாக்ஸ் திட்டத்தில் 20 இற்கும் அதிக நாடுகளிற்கு 2 கோடிக்கும் அதிக தடுப்பூசி விநியோகம்: உலக சுகாதார அமைப்பு!

கோவாக்ஸ் திட்டத்தின் கீழ 2 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பு மருந்து இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவிக்கையில்,

“கோவாக்ஸ் திட்டத்திற்கு இது சிறப்பான வாரமாகும். முதல் கொரோனா தடுப்பூசி பணி கானாவில் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 2 கோடி கொரோனா தடுப்பூசிகள் 20 நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இன்னும் 1 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பு மருந்துகள் 3 0இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பப்பட உள்ளன. மொத்தமாக கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் 51 நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சுமார் 130 நாடுகள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பு மருந்தைக் கூடப் பெறவில்லை. வெறும் 10 நாடுகளுக்கு சுமார் 75% கொரோனா தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது நியாயமற்றது. அனைத்து நாடுகளுக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள் சென்றடைய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை விமர்சித்திருந்தது.

கோவாக்ஸ் திட்டம்

தேவை உள்ள நாடுகளுக்கு கொரோனா தடுப்பு ஊசிகளை விநியோகிக்க கொண்டுச் செல்லப்படும் திட்டமே கோவாக்ஸ். உலக சுகாதார அமைப்பு உருவாக்கிய கோவாக்ஸ் திட்டத்தில் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள் உட்பட சுமார் 91 நாடுகள் உள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தாய்வானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 15 பேர் காயம்

east tamil

அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக டிரம்ப் அறிவிப்பு

east tamil

ஹமாஸ்ஸினால் விடுவிக்கப்பட்ட 3 பணயக்கைதிகள் இஸ்ரேலில் இணைவு

east tamil

47வது அமெரிக்க ஜனாதிபதியாக பதியேற்கும் டொனால்ட் ட்ரம்ப்

east tamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

Leave a Comment