அரசை சங்கடப்படுத்தவே முடக்கல் கோரிக்கையாம்: கண்டுபிடித்தார்கள் கோட்டாவின் அமைச்சர்கள்!

Date:

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கையில்,  அரசாங்கத்தை சிரமப்படுத்தும் நோகத்துடனேயெ நாட்டை முடக்கும் கோரிக்கைகள் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர் கோட்டாபய அரசின் இரண்டு அமைச்சர்கள்.

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஆகியோரே இதனை தெரிவித்துள்ளனர்.

கோவிட்-19 தொற்றுநோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய அரசாங்கத்தை அவமதிப்பதை, இத்தகைய கோரிக்கைகள் நோக்கமாக கொண்டுள்ளதாக அமைச்சர் அளுத்கமகே கூறினார்.

கோவிட் -19 கட்டுப்பாட்டிற்காக முடக்கம் அறிவிக்கப்படாவிட்டால், மக்களை எதிர்ப்பு தெரிவிக்க சில குழுக்கள் ஊக்குவிப்பதாக அமைச்சர் கூறினார்.

செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்தில் அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர், இந்த நெருக்கடியை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்று சில பிரிவுகள் விரும்பவில்லை என்றும் கூறினார்.

முடக்கம் அறிவிக்கப்பட்டால், அது குறைந்தது ஒரு மாதமாவது இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். இதன்போது, பொருளாதாரம் எவ்வாறு நிர்வகிக்கப்படும் என்று கேள்வி எழுப்பினார்.

இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிக்கையில், இத்தகைய கோரிக்கைகளுக்குப் பின்னால் உள்ள நோக்கம் அரசாங்கத்தை சிரமப்படுத்துவதாகும் என்றார்.

அவர்களின் நோக்கம் கோவிட் -19 சூழ்நிலையைக் கருத்தில் கொண்டதல்ல. ஆனால் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி அரசுக்கு இழப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலேவை பரிசோதித்த 10 மருத்துவர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான...

டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது!

டிக்கோயா நகரில் இடம்பெற்ற வயோதிப தம்பதியின் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான...

மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களை பயிர் செய்கையாளர்கள் அச்சுறுத்துவது தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு

மட்டக்களப்பு, மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்களை சட்டவிரோதமாகப் பயிர்ச்செய்கையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்