சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் உள்ள வசதி குறைந்த பெண் தலைமைத்துவ மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவு பொதி வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று சுன்னாகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட பலாலி கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் ஆயிரம் பேருக்கு இன்றைய தினம் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மற்றும் யாழ் மாவட்ட ராணுவ உயரதிகாரிகள், பலாலி கட்டளை தலைமையாக உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
1
+1
1
+1
+1
+1
+1