26.3 C
Jaffna
December 30, 2024
Pagetamil
கிழக்கு

அம்பாறையில் திடீர் மழை!

அம்பாறையில் மழையுடன் கூடிய காற்றுடன் காலநிலை மாற்றம் திடீரென ஏற்பட்டமையினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். சில இடங்களில் மழை குறைந்து காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்வதுடன் மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்துள்ளன.

இன்று (17) திடீரென காற்று அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, அக்கரைப்பற்று பகுதிகளில் கடும் மழையுடன் காற்று வீசியது. இதனால் வீதியால் பயணம் செய்த பொதுமக்கள் வாகன சாரதிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இதேநேரம் மழை வீழ்ச்சி இடைவிடாது பெய்து வருகின்ற நிலையில் நீர்நிலைகள் யாவும் நீரால் நிரம்பியுள்ளதுடன் சில தாழ்நில நெற் செய்கை வயல் நிலங்களும் முற்றாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது .பகல் நேரத்தில் பயணிக்கும் வாகனங்களின் முன்விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டு பயணிப்பதையும் அவதானிக்க முடிந்தது. அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருவதுடன் வீதிகள் குடியிருப்புக்கள் என பல இடங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளமையும் இந்நிலை நீடித்தால் வெள்ள அனர்த்தம் ஏற்படும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சில இடங்களில் புழுதியுடன் கூடிய காற்று வீசியதுடன் விளம்பர பலகைகளும் சேதமடைந்தன.கடற்கரையோரங்களில் உள்ள தென்னைமரங்கள் அகோர காற்றினால் ஓலைகளை இழந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

-பா.டிலான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிரான் பிரதேச செயலகத்தின் முன் போராட்டம்

Pagetamil

அச்சமின்றி பணியாற்றக் கோரி உத்தியோகத்தர்கள் போராட்டத்தில்

east tamil

நிந்தவூரில் அனாதை சிறுவர்களுக்கான கல்வி நிலைய அடிக்கல் நாட்டு நிகழ்வு

east tamil

2700 குடும்பங்களுக்கு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வெள்ள நிவாரண உதவி

east tamil

வாவிக்கரை பகுதியில் கரைக்கு வந்த 16 அடி முதலை – தைரியத்துடன் கைப்பற்றிய பொதுமக்கள்

east tamil

Leave a Comment