கொரோனா தொற்றிற்குள்ளான மூதாட்டியொருவர், அதிலிருந்து குணமடைந்த பின்னரும் வீடு திரும்ப முடியாத நிலையில் உள்ளார்.சுமார் ஒரு வருடமாக வைத்தியசாலையில் அவர் தங்கியுள்ளதா செய்தி வெளியாகியுள்ளது.
அவரது மகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதால், மூதாட்டி போக்கிடமின்றி வைத்தியசாலையிலேயே தங்கியுள்ளார்.
மினுவாங்கொடவை சேர்ந்த மூதாட்டிக்கே இந்த கதி நேர்ந்துள்ளது. அவர் கொரோனா தொற்றிற்குள்ளானதையடுத்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவர் குணமடைந்த பின்னரும், அவரது ஒரே மகள் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார்.
தனது மகள் வீடு கட்ட நான்கரை இலட்சம் ரூபா பணம் தான் வழங்கியதாகவும், தற்போது தன்னிடம் பணமும், பொருட்களும், தங்குமிடமும் இல்லையென அவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1