கண்டி தலதா ஆலயத்தின் இந்த வருடத்தின் எசல பெரஹெரா விழாவின் முதல் நிகழ்வாக ‘கும்பல் பெரஹரா’ இன்று வீதி உலா வருகிறது.
நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக பார்வையாளர்கள் இல்லாமல் எசல பெரஹரா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடைபெற்று வருகிறது.
இன்று முதல் ஓகஸ்ட் 17 ஆம் திகதி வரை ஐந்து நாட்கள் ‘கும்பல் பெரஹெரா’ வீதி வலம் வரும்.
ஓகஸ்ட் 18 ஆம் திகதி முதல் ரந்தோலி பெரஹரா கண்டி தெருக்களில் தொடங்கும்.
ஓகஸ்ட் 22 ஆம் திகதி இறுதி ரந்தோலி பெரஹரா ஊர்வலம் நடைபெறும்.
தண்ணீர் வெட்டும் விழா மற்றும் பகல் ஊர்வலம் ஓகஸ்ட் 23 ஆம் திகதி நடைபெறும், அதன்பிறகு எசல பெரஹராவை வெற்றிகரமாக முடித்ததை அறிவிக்கும் நிருபம் தியவடன நிலமே மற்றும் பஸ்நாயக்க நிலமே ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும்.
ஊர்வலத்தில் 100 யானைகள் பங்கேற்கின்றன, 5,600 நடனக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் கலைஞர்களும் ஊர்வலத்தில் சேர உள்ளனர்.
கொரோனா நெருக்கடியால் நாட்டில் அனைத்து நிகழ்வுகளிற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.