பட்டா ரக வாகனத்தின் கண்ணாடியுடன் மோதி, படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவர் உயிரிழப்பதற்கு முன்பாக தனது இரண்டு சிறுநீரகங்களையும் தானம் செய்துள்ளார்.
இணுவில், தியேட்டர் வீதியை சேர்ந்த தங்கராசா பிரிஞ்சன் (29) என்பவரே இவ்வாறு சிறுநீரகங்களை தானம் செய்தார். அவர் நேற்று (12) உயிரிழந்தார்.
கடந்த 9ஆம் திகதி மருதனார்மடத்திற்கு பொருள் கொள்வனவு செய்ய துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளார். ஒழுங்கையிலிருந்து பிரதான வீதிக்கு ஏறும்போது, மருதனார்மடத்திலிருந்து இணுவிலை நோக்கி ஆடு ஏற்றி வந்த பட்டா வாகனத்தின் சாரதி, வதுபக்கமாக வாகனத்தை வேகமாக திருப்பியுள்ளார்.
இதன்போது வாகனத்தின் கண்ணாடி துவிச்சக்கர வண்டியில் சென்றவரை மோதியது. இதில் படுகாயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பதற்கு முன்னதாக தனது சிறுநீரகங்களை தானம் செய்தார்.