25.2 C
Jaffna
January 14, 2025
Pagetamil
ஆன்மிகம்

ருத்ராட்சம் அணிந்தால் நம் உடல், மனதில் என்ன நடக்கும் தெரியுமா?

ருத்ராட்சம் என்பது மிகவும் புனிதமானது. அது சிவ பெருமான் முதல் சித்தர்கள் வரை அணியக்கூடிய சக்தி வாய்ந்த பொருளாகும். இது சிவ பெருமானின் கண் என பயன்படுத்தப்படுகிறது. சிவ பெருமான் பொன்னால் அலங்கரித்துக் கொள்ளாமல், ருத்ராட்சம் தன் அலங்காரப் பொருளாக வைத்துள்ளார் என்று அதன் மகத்துவம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். நாம் இங்கு ருத்ராட்சம் அணிவதால் என்ன பலன், நம் உடல் மற்றும் மனதில் எப்படிப்பட்ட மாற்றங்கள், பலன்கள் ஏற்படுகின்றன என்பதை விரிவாக பார்ப்போம்.

எத்தனை முக ருத்ராட்சம் அணிந்தால் என்ன பயன்கள் கிடைக்கும் தெரியுமா?

ருத்ராட்சம் அணிவதால் நம் மனதில் சிவ சிந்தனைகள் எழும். மற்றவர்கள் நம்மை பார்க்கக்கூடிய கெடு பார்வை நம்மை பாதிக்காது. ருத்ராட்சம் நம் மனதில் எழும் எதிர்மறை சிந்தனைகளை அழிப்பதோடு, நம்மை அண்டும் எதிர்மறை சக்திகளை நீக்கும்.

ருத்ராட்சம் அணிந்தால் இவ்வளவு பயன்கள் கிடைக்குமா?

எந்த ஒரு விஷயம், நிகழ்வை ஆழ்ந்து நோக்கச் செய்யும். நாம் செய்யும் செயலில் துரிதம் தவிராமல், தெளிவாக செயல்பட வைக்கும். எந்த ஒரு வேண்டாத பழக்கங்கள் நம்மை விட்டு அதுவாக விலகும். தொடர்ந்து கெட்ட பழக்கத்தை விட நினைப்பவர்கள், ருத்ராட்சம் அணிவதால் அந்த கெட்ட பழக்கம் நீங்கும்.

ருத்ராட்சம் உண்மையானதா, போலியானதா எப்படி கண்டுபிடிப்பது தெரியுமா?

எதிலும் ஒரு திருப்தி ஏற்படும்.
நம்மிடம் இருக்கும் கெட்ட விஷயங்களை நீக்குவதோடு, நம்மை மேன்மை அடைய வைக்கும் நல்லுணர்வு அதிகரிக்கும்.
ருத்ராட்சம் அணிவதால் பிறருக்கு உதவும் மனப்பான்மை ஏற்படுகிறது.

திருமணமானவர்கள் ருத்ராட்சம் அணியலாமா?

ருத்ராட்சம் அணிவதற்கான விதிகள்
ருத்ராட்சம் அணிந்தால் நமக்கு தேவையான துன்பம் வந்தால் உடனடியாக சமாளிக்க, போக்க நமக்கு வழி கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு துன்பம் வரப்போகிறது என்பதை முன்னரே உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் கிடைக்கும். ருத்ராட்சம் குறித்த அனைத்து கேள்விகளுக்கான விடைகள்
துன்பத்தை உணருவதோடு, துன்பம் வர காரணமானவற்றையும் உணரக்கூடிய அற்புத பலன் கிடைக்கும்.

உலகில் தீட்டு ஆன இடம் நம் சிவபெருமான் இருக்கும் சுடுகாடு. அதனால் ருத்ராட்சம் அணிய எந்த ஒரு தீட்டும் இல்லை. சிவபெருமான் எந்த பேதமும் அற்றவர் என்பதால், ஆண், பெண், திருநங்கை என யார் வேண்டுமானாலும், எந்த ஒரு பேதமும் இல்லாமல் அணிந்து கொள்ளலாம்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மீனம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

கும்பம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

மகரம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

தனுசு ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

விருச்சிகம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

Leave a Comment