இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நுழைந்த இளைஞன் ஒருவர் இன்று யாழ்ப்பாணம் குருநகரில் அடையாளம் காணப்பட்டார்.
25 வயதான இவர் நேற்று முன்தினம் கடல்மார்க்கமாக நாட்டுக்குள் நுழைந்துள்ளார்.
குருநகர் கிழக்கு, ரெக்கிளமேசன் பகுதியில் வீடொன்றில் அவர் இன்று பொலிசாரால் அடையாளம் காணப்பட்டார்.
12 வயதில் குடும்பமாக அவர் விமானம் மூலம் இந்தியா சென்றுள்ளார். தற்போது அங்கு தந்தை உயிரிழந்து விட்டதாகவும், தாயார் சுகவீனமடைந்துள்ளதாகவும், குடும்ப கஸ்ரம் காரணமாக தொழில் செய்ய குருநகரிற்கு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர் வீட்டில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.