குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 சந்தேகநபர்கள் கைது!

Date:

மட்டக்களப்பு வாகரை புச்சாக்கேணி பிரதேசத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 3 நபர்களை கைது செய்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

புச்சாக்கேணி கிராமத்தில் உள்ள தோட்டங்கள் மற்றும் வீடுகளிலிருந்து திருடப்பட்ட 07 நீர் இறைக்கும் இயந்திரங்களும் கைதானவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

கிராமத்தில் தொடர்ச்சியாக நீர் இறைக்கும் இயந்திரங்கள் திருடப்பட்டு வந்த நிலையில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பட்ட முறைப்பாட்டினையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந் நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யு,எம்.விஜேவர்த்தன தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் சனிக்கிழமையன்று (7)  வாழைச்சேனை மாவட்ட நீதி மன்ற நீதிபதி எம்.எச்.எம். பசில் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது சந்தேக நபர்களை எதிவரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிசாருக்கு கட்டளை பிறப்பித்தார்.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்