பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (5) வெளியிடப்படவுள்ளது. தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
நாள் சம்பளம் தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டாலும், வேலை நாட்கள் தொடர்பில் தமக்கு உத்தரவாதமளிக்க முடியாதென தொழில் அமைச்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறவுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. சம்பளம் வழங்கக்கூடிய அளவிற்கேற்பவே வேலைநாட்கள் தீர்மானிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளன.
அதாவது மாதத்தில் 15 நாளுக்கு மேல் சம்பளம் வழங்க முடியாதென்ற நிலைப்பாட்டிலேயே சம்மேளனம் இருக்கிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1