வவுனியாவில் டெல்டா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்!

Date:

வவுனியாவிலும் டெல்ரா வைரஸ் தொற்றுடன் கோவிட் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் டெல்ரா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வவுனியாவிலும் டெல்ரா வைரஸ் தொற்றுக்குள்ளான கோவிட் நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (06.08) காலை வெளியாகின.

அதில், வவுனியா வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண் ஒருவருக்கு டெல்ரா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பு சென்று வந்த நிலையில் காய்ச்சல் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்ட போது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யபபட்டது.

இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகிய நிலையில், அவருக்கு டெல்ரா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதராப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தொற்றாளரை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் — பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில்

ஆலிம்களும் சமூகத்தின் அறிவுசார் வளமாக விளங்கும் புத்திஜீவிகளும் இணைந்து செயற்பட்டு, சமகால...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்