நீண்ட இடைவெளிக்குப் பின் ‘காதல்’ பட இயக்குனர்: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Date:

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடித்த ‘காதல்’ படம் தமிழ் சினிமாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல். இவரின் இயக்கத்தில் கடைசியாக ‘வழக்கு எண் 18/9’ படம் வெளியாகி இருந்தது. தொடர்ந்து 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலாஜி சக்திவேல் இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. நான் நீ நாம் என தலைப்பிடப்பட்டுள்ளது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சில படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பாலாஜி சக்திவேல். இவர் இயக்கத்தில் வெளியான காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 உள்ளிட்ட படங்கள் இன்றளவும் சினிமா விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் நினைவு கூறப்பட்டு வருகிறது.

வழக்கு எண் 18/9 படத்திற்கு பிறகு அவரது இயக்கத்தில் எந்தப்படமும் வெளியிடப்படவில்லை. இடையில், யார் இவர்கள், ர ர ராஜசேகர் என இரு படங்களை அறிவித்தார். ஆனால், இந்த இரண்டு படங்களும் அறிவிப்போடு நின்றது. அண்மையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற அசுரன் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் பாலாஜி சக்திவேல்.

தொடர்ந்து ஒன்பது வருடங்கள் கழித்து பாலாஜி சக்திவேல் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த படத்துக்கு ‘நான் நீ நாம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. வீரா, சாந்தினி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சுரேஷ் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜாவித் ரியாஸ் இசையமைக்கிறார். ப்ளூமன் கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒன்பது வருடங்களுக்கு பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் இப்போதே படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

 

spot_imgspot_img

More like this
Related

சீனாவில் காலணி தொழிற்சாலை தீவிபத்தில் 28 பேர் பலி

கிழக்கு சீனாவில் வியாழக்கிழமை ஒரு காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில்...

பாலியல் குற்றச்சாட்டில் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் கைது!

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தேசிய பட்டியல் ஊடாக காத்தான்குடி நகர...

அறிவுசார் சொத்துரிமையை மீறிய விமல் ரூ.10 இலட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவு

'இல்லை என்பதற்குப் பதிலாக உண்மை' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டதன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்