Pagetamil
விளையாட்டு

பெலாரஸ் திரும்ப மறுத்த வீராங்கனை வியன்னா பறந்தார்!

ஒலிம்பிக் அணியிலிருந்து நீக்கப்பட்டு உடனடிாக நாடு திரும்ப உத்தரவிடப்பட்ட பெலாரஸ் வீராங்கணை இன்று ஜப்பானை விட்டு வெளியேறினார்.

24 வயதான கிறிஸ்டினா டிமானோவ்ஸ்காயா இன்று வியன்னாவுக்கு விமானத்தில் புறப்பட்டார்.

அவருக்கு போலந்து மனிதாபிமான விசா வழங்கியதால், அவர் நேரடியாக வார்சோவுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இலக்கு மாற்றப்பட்டு, அவர் வியன்னா புறப்பட்டார்.

தனது நடவடிக்கைகள் அரசியல் எதிர்ப்பு அல்ல என தெரிவித்துள்ளார். “நான் என் நாட்டை நேசிக்கிறேன், நான் என் நாட்டைக் காட்டிக் கொடுக்கவில்லை. இது ஒலிம்பிக்கில் எங்கள் அதிகாரிகள் செய்த தவறுகளைப் பற்றியது“ என்றார்.

தனது பயிற்சியாளர்களை விமர்சித்த பிறகு, கடந்த வாரம் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, தனது உடமைகளை பொதி செய்ய நிர்பந்திக்கப்பட்ட பின்னர், தடகள வீராங்கனை தனது பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்தார்.

தனது நாட்டுக்கு திரும்பினால், கைது செய்யப்படுவேன் என அச்சம் தெரிவித்தார்.

இதையடுத்து அவருக்கு போலந்து மனிதாபிமான விசா வழங்கிது.

டோக்கியோவில் உள்ள போலந்து தூதரகத்திற்கு அவர் மாற்றப்படுவதற்கு முன்பு அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அங்கு அவர் நரிதா விமான நிலையத்திற்கு பயணம் செய்யும் வரை தங்கியிருந்தார்.

கிறிஸ்டினா டிமானோவ்ஸ்காயாவின் உணர்ச்சிகரமான அறிக்கையை தொடர்ந்து அவர் தேசிய அணியில் இருந்து நீக்கப்பட்டதாக பெலாரஸ் தெரிவித்திருந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

Leave a Comment