25.5 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இலங்கை

மன்னாரில் அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டம்!

மன்னாரில் அதிபர்,ஆசிரியர் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து இன்று திங்கட்கிழமை (2) காலை 9 மணி அளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மன்னார் வலயக்கல்வி பணிமனைக்கு முன் குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

இதன் போது 24 வருட ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு உடனடியாக தீர்வினை வழங்க கோரியும், ஆசிரியர், மாணவர், பெற்றோர்களை துன்புறுத்துகின்ற கல்வி நெருக்கடிக்கு உடனடியாக தீர்வினை வழங்க கோரியும், இலவசக் கல்வியை இராணுவ மயமாகும் கொத்தலாவல சட்ட மூலத்தை உடனடியாக ரத்து செய்யக் கோரியும் கோரிக்கைகளை முன் வைத்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் மன்னார் வலயக்கல்வி பணிமனை க்கு முன் ஆரம்பமாகி மன்னார் பஜார் வீதியூடாக சென்று மன்னார் மாவட்டச் செயலக வீதியை சென்றடைந்தது.

அங்கிருந்து மன்னார் நகர சபை வீதியூடாக மீண்டும் மன்னார் வலயக்கல்வி பணிமனை வீதியை சென்றடைந்தது.

குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டதோடு, குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பெல்ஜியம் தீ விபத்தில் தமிழ் இளைஞன் பலி

Pagetamil

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் சகோதரிகள் பலி

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

‘என்னை சேர் என அழைக்க வேண்டும்’: சைக்கோத்தனமாக நடந்த அர்ச்சுனா திங்கள் கைது?

Pagetamil

வெளிநாட்டு ஜோடியின் உயிரை காப்பாற்றிய பொலிசார்

Pagetamil

Leave a Comment