ராஜ்குந்த்ரா ஆபாச பட வழக்கில் கைது செய்து விடுவார்களோ என்ற பயத்தில் ஷெர்லின் சோப்ரா முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.aந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஆபாசப் படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றிய புகாரில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இது இந்தி பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜ்குந்த்ராவின் ஆபாசப் படங்களில் நடித்த நடிகைகளையும், தொழில் ரீதியாக அவருடன் தொடர்பு வைத்திருந்த நடிகைகளையும் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
தமிழில் கஜேந்திரா, திண்டுக்கல் சாரதி, குஸ்தி படங்களில் நடித்துள்ள புளோராவுக்கும் ராஜ்குந்த்ராவுக்கும் தொடர்பு உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஆபாச படம் எடுத்ததில் தனக்கு தொடர்பு இல்லை என்றும், ராஜ்குந்த்ரா எடுத்த படங்களில் நான் வேலை செய்யவில்லை என்றும் புளோரா மறுத்துள்ளார்.
இதுபோல் நடிகை ஜெலினா ஜெட்லியும் மறுத்து இருக்கிறார். ராஜ்குந்த்ராவின் ஆபாச படங்களில் நடித்த நடிகைகள் தங்களை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் வெப் தொடர் என்று பொய் சொல்லியும் ஆபாச படங்களில் நடிக்க வைத்து விட்டதாக போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
சில நடிகைகளுக்கு போலீசார் சம்மன் அனுப்பியும் உள்ளனர். சிலர் இதில் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜ்குந்த்ரா பற்றி இந்தி நடிகை ஷெர்லின் சோப்ரா பரபரப்பு புகார் கூறியிருந்தார். அவருடன் பணியாற்றியது தனக்கு மோசமான அனுபவம் என்று கூறிய அவர், ராஜ்குந்த்ரா மீது பாலியல் புகாரும் கூறியிருந்தார்.
அதில், ‘ 2019 ஆம் வருடம் ராஜ் குந்த்ராவின் மானேஜர் தொடர்புகொண்டு புராஜெக்ட் பற்றி பேச வேண்டும் என்றார் பேசினோம். அதன் பிறகு திடீரென்று ராஜ் குந்த்ரா என் வீட்டிற்கு வந்தார். நான் அவரைத் தடுத்தும் என்னை முத்தமிடத் தொடங்கினார். தொடர்ந்து முன்னேறியதால் பயத்தில் அவரைத் தள்ளிவிட்டு பாத்ரூமுக்கு சென்று பூட்டிக் கொண்டேன். அவர் கிளம்பும் வரை வெளியே வரவில்லை என்று கூறியிருந்தார்.
ஷெர்லின் சோப்ரா 2021 ஏப்ரல் மாதம் ராஜ்குந்த்ரா மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்து உள்ளார். இதை தொடர்ந்து ராஜ்குந்த்ரா மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய்ப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ராஜ்குந்த்ராவுடன் அவருக்குள்ள தொடர்பு குறித்து விசாரிக்க போலீசார் நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் அவர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.