26.2 C
Jaffna
December 18, 2024
Pagetamil
கிழக்கு

வாகனேரி நீர்பாசன திட்டத்தின் கீழ் முதற் தடவையாக இடைப்போக விவசாயச் செய்கை!

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி நீர்பாசன திட்டத்தின் கீழ் முதற் தடவையாக இடைப் போக விவசாயச் செய்கை செய்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானங்கள் எடுப்பதற்கான கலந்துரையாடல் நிகழ்வு இன்று கிரானில் நடைபெற்றது.

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு தலைமையில் கிரான் ரெஜி கலாச்சார மண்டபத்தில் இவ் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன், செங்கலடி உறுகாமம் பிரதேச நீர்பாசன பொறியியலாளர் விஷ்ணுரூபன். பிரதி மாவட்ட விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராசா ஆகியோர் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஏனைய திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இம்முறை வாகநேரி திட்டத்தில் கல்வளை மதுரங்கேணி கண்டத்தில் 150 ஏக்கர் விவசாயமும்,50 ஏக்கரில் உப உணவுப் பயிர்களும் செய்கை பன்னப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டரை மாதங்களுடைய நெல்லினம் தெரிவுடன் 30.7.2021 அன்று முதல் விதைப்பு ஆரம்பிக்க வேண்டும் என்றும் அறுவடையானது 15.10.2021ஆம் திகதி அன்று இறுதி திகதியாகும் என்பதுடன் மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேவேளை இவ் விவசாயச் செய்கையில் விவசாயிகள் எதிர் நோக்கவிருக்கும் சாதக பாதகமான நிலமைகள் தொடர்பாக பிரதி மாவட்ட விவசாயப் பணிப்பாளர் விளக்கமளித்தார்.

அத்துடன் தற்போதைய சேதனப் பசளை பாவனை தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டது. தரமற்ற போலியான சேதனப் பசளைகளை தயாரிப்பில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் அவ்வாறான பசளைகள் தமக்கு வழங்கப்படுமானல் அவற்றினைக் கொண்டு எவ்வாறு விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவது என்று விவசாயிகள் தங்கள் ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார்கள். இவ்வாறான பசளைகளை கொள்வனவு செய்வதனை தவிர்க்குமாறும் கிரான் பிரதேசத்தில் 6 இற்கு மேற்பட்ட பசளை தயாரிப்பு உற்பத்தி நிலையங்கள் உள்ளதாகவும் அவற்றில் தரமானதை தெரிவு செய்து பயன்படுத்துமாறு பிரதேச செயலாளர் கேட்டுக் கொண்டார். அத்துடன் விவசாயிகள் தங்களுக்கு தேவையான பசளையை தாமே தயாரித்து பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட முன்வரவேண்டும் என்றும் இதற்கான மானிய உதவி மற்றும் ஏனைய அரச உதவிகளை இயன்றவரை மேற்கொண்டு தருவதாக பிரதேச செயலாளர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விவசாயிகளுக்கான பசளை விநியோகம்

east tamil

நிரம்பியது கந்தளாய் குளம்

east tamil

மட்டக்களப்பில் சிறுவர் பேரவையின் உறுப்பினர்களுக்கான செயலமர்வு

east tamil

அம்புலன்ஸ் விபத்து

east tamil

ஓட்டமாவடியில் இளைஞர்களுக்கான தொழிற் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

east tamil

Leave a Comment