ஆசைக்காட்டி மோசம் செஞ்ச POCO; செம்ம கடுப்பில் இந்திய ரசிகர்கள்!
போக்கோ எக்ஸ்3 ஜிடி நேற்று அறிமுகமானது
அது இந்தியாவில் வாங்க கிடைக்காது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
விலையை மீறிய அம்சங்களை கொண்டுள்ளதால் பயனர்கள் ஏமாற்றம்
போக்கோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக போக்கோ எக்ஸ்3 ஜிடி மாடல் நேற்று அறிமுகமானது. இது மறுபெயரிடப்பட்ட ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஆகும்.
இது அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள POCO ரசிகர்கள் POCO X3 GT நாட்டில் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பதை அறிய விரும்பினர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அந்த கேள்விக்கு ஒரு ஏமாற்றமான பதிலே கிடைத்துள்ளது.
120W சார்ஜிங், 108MP கேமரா! கண்ணை மூடிக்கிட்டு இந்த Redmi Phone-ஐ வாங்கலாம்!
அது – POCO X3 GT இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படாது, இந்த தகவல் POCO இந்தியாவின் இயக்குனர் ஆன அனுஜ் ஷர்மாவிடமிருந்து நேரடியாக வருகிறது.
இது தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா உள்ளிட்ட பல சந்தைகளில் கிடைத்தாலும் இந்தியாவில் வாங்க கிடைக்காது.
ஆம்.. பிராண்டின் இந்திய போர்ட்ஃபோலியோவில் POCO X3 GT-க்கு இடமில்லை!
போக்கோ எக்ஸ் 3 ஜிடி இந்திய அறிமுகம் குறித்த அப்டேட்டை அனுஜ் சர்மா ட்வீட் செய்துள்ளார். இந்த பிராண்ட் ஏற்கனவே POCO X3 Pro மற்றும் POCO F3 GT-ஐ இந்தியாவில் இரண்டு பிரிவுகளாக வழங்குகிறது. அத்தகைய சந்தர்ப்பத்தில், POCO X3 GT-ஐ கொண்டு வந்து போர்ட்ஃபோலியோவில் குழப்பத்தை ஏற்படுத்தும். இந்த பிராண்டில் எதிர்காலத்திற்கான பெரிய திட்டங்கள் உள்ளன, ஆனால் POCO X3 GT அவற்றில் ஒரு பகுதியாக இல்லை என்று அவர் கூறி உள்ளார்.
ஆக POCO X3 GT இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படாது என்பதை இது மிகவும் உறுதிப்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட்போன் விலையை மீறிய அம்சங்களை கொண்ட ஒரு ஸ்மார்ட்போனாக இருப்பதால், இதை வாங்கலாம் என்று ஆவலோடு காத்திருந்த இந்திய ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.