தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான ராட்சசன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
விஷ்ணு விஷால் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பின்பு இவர்கள் இருவரும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்று டென்னிஸ் வீராங்கனையான ஜுவாலா குட்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஜுவாலா குட்டா பிரபல கிரிக்கெட் வீரருடன் இணைந்து முன்னர் கிசுகிசுக்கப்பட்டார். முன்னாள் கிரிக்கெட் வீரரான முகமது அசாருதீனுடன் இணைத்து கிசுகிசுக்கள் வந்திருந்தன.
முகமது அசாருதீன் நவ் யூரின் என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டுள்ளார் பின்பு இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து பெற்ற அதே வருடம் பாலிவுட் நடிகையான சங்கீதா பிஜ்லானி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றனர். பின்பு முகமது அசாருதீன் மற்றும் ஜுவாலா குட்டா இருவரைப் பற்றிய பல கிசுகிசுக்கள் வந்தன. அதனைப்பற்றி ஜுவாலா குட்டாவிடம் கேட்ட போது கூட அவர் கோபமடைந்து எப்போதும் ஏன் இதை பற்றிய கேள்வி கேட்கிறீர்கள் தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள் என வெளிப்படையாக கூறியிருந்தார்.
இவர்கள் இருவருக்கும் எந்த விதமான நட்புறவு இருந்தது என்பதை பற்றி இதுவரை இவர்கள் இருவரும் வெளிப்படையாக கூறவில்லை.
தற்போது விஷ்ணு விஷால் ஜுவாலா குட்டா இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். சில வருடங்களுக்கு முன் வெளியான தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.