28.8 C
Jaffna
March 6, 2025
Pagetamil
இலங்கை

சந்திப்பு சிறப்பு!

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கும் இலங்கை சுதந்திரக் கட்சிக்குமிடையில் இன்று பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

சுதந்திரக்கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களிற்கு, சில அரசாங்க அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களினால் நடக்கும் அநீதிகள் குறித்து ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதில் கவனம் செலுத்தி அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என தயாசிறி தெரிவித்தார்.

கலந்துரையாடல் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை சுதந்திரக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் மஹிந்த அமரவீர, தேர்தல் முறை திருத்தம், ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் மற்றும் உரங்கள் வழங்குவது போன்ற பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், கலந்துரையாடல் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, துணை சபாநாயகர் ரஞ்சித் சியாம்பலபிட்டி, அமைச்சர்கள் நிமல் சிறிபாலா டி சில்வா, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்கள் தயசிறி ஜெயசேகர மற்றும் துமிந்த திசானாயக ஆகியோர் இலங்கை சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினர். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுடன், தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க கலந்து கொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தென்னக்கோன் பற்றி தகவலறிந்தால் சிஐடிக்கு அறிவிக்கவும்!

Pagetamil

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி தாயும், மகனும் பலி

Pagetamil

மேர்வின் சில்வா கைது!

Pagetamil

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!