25.4 C
Jaffna
January 24, 2025
Pagetamil
மலையகம்

13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 10 பேர்: இதுவரை 7 பேர் கைது!

நாவலப்பிட்டி பகுதியில் 13 வயது சிறுமியை குகைக்குள் வைத்து துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 10 பேர் அந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அண்மைக்காலமாக நாட்டில் சிறார் துஷ்பிரயோக சம்பவங்கள் பற்றிய செய்திகள் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நாவலப்பிட்டியில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவமும் அதிலொன்று.

9 வயதிலிருந்தே துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியை சீரழித்தவர்களில் பெற்ற தந்தையும் ஒருவர்.

நாவலப்பிட்டி, ஹரங்கல, இலுக்தென்ன பகுதியில் வசிக்கும் சிறுமியே துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்.

இரண்டு ஆண்டுகளின் முன்னர் சிறுமியின் தாய் பிரவசத்திற்காக வைத்தியசாலையில் தங்கியிருந்த போது, சிறுமி தனது தந்தையால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார். இதைப்பற்றி தாயாரிடமும் சிறுமி கூறினார். எனினும்,தாயார் அதை பெரிதாக கணக்கில் எடுக்கவில்லை.

எனினும், சிறுமியை தந்தை துன்புறுத்தும் நிகழ்வுகள் தொடர்ந்ததால், வட்டதாரவில் உள்ள அத்தை வீட்டில் சிறுமியை தங்க வைத்தார் தாயார்.

இந்த நிலையில்தான், கடந்த 3ஆம் திகதி முதல் சிறுமியை காணவில்லையென நாவலப்பிட்டி பொலிசாரிடம் தாயார் முறையிட்டார். பின்னர் 7ஆம் திகதி சிறுமியை நாவலப்பிட்டி பொலிசாரிடம் தாயார் ஒப்படைத்தார்.

சிறுமியை காணவில்லையென புகார் கூறப்பட்டதும், சிறுமியை அழைத்து சென்றவர்கள் திரும்ப கொண்டு வந்து ஒப்படைத்துள்ளனர்.

சிறுமியின் தந்தை 42 வயதானவர். மதுவிற்கு அடிமையாளவர். அவருக்கு நிரந்தர வேலை இல்லை, அவரது தாயார்  தேயிலைக் கொழுந்து பறித்து வாழ்க்கை ஓட்டினர். சிறுமி முதன்முதலில் சுமார் 8 வயதாக இருந்தபோது பக்கத்து வீட்டுக்காரரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார். பின்னர், இன்னொரு வீட்டில் தங்கிருந்தபோதும் துஷ்பிரயோகத்தி்ற்குள்ளாகியுள்ளார்.

சிறுமி தனது அத்தை வீட்டில் இருந்தபோது 32 வயதானவரால் கடத்தப்பட்டு, வட்டதார பகுதியில் உள்ள காட்டில் குகையில் பலமுறை துஷ்பிரயோகம் செய்யப்பட்டார். தடயவியல் நோயியல் நிபுணர் அளித்த அறிக்கை மற்றும் சிறுமி அளித்த அறிக்கைகளின்படி, அவர் பல சந்தர்ப்பங்களில் பலரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்னவென்றால், மாயா தனது தந்தையால் சுமார் 10 வயதில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார். சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக

ஹரங்கல, வட்டதார, இலுக்தென்ன மற்றும் நயபன பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினரிடமிருந்து தகவல்களை மறைத்து, துஷ்பிரயோகத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் சிறுமியின் அத்தையும் கைதாகியுள்ளார்.

கைதானவர்களில் பலர் போதைக்கு அடிமையானவர்கள். சிறுமி அஞ்சல் அடையாள அட்டை பெற 600 ரூபா கோரியபோது, துஷ்பிரயோகம் செய்து விட்டு பணம் வழங்கியவரும் கைதாகியுள்ளார்.

சிறுமி அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில், அவர் தடுத்து வைக்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 10 இடங்களை காவல்துறை குற்ற புலனாய்வு பிரிவு (சோகோ) பரிசோதித்து, அந்த இடங்களில் பல முக்கிய ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது என்று அந்த பிரிவின் OIC இன்ஸ்பெக்டர் சம்பிக விமலரத்ன தெரிவித்தார்.

ஒரு பிள்ளையின் தந்தையொருவர் சிறுமியை அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குகைக்குள் இருந்து படுக்கை, ஆணுறைகள் மீட்கப்பட்டன.

மற்றொரு குகையில் கிட்டத்தட்ட 60 பியர் ரின்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களில் ஒருவர் சிறுமியை பல முறை குகைக்கு அழைத்துச் சென்று பியர் குடித்துவிட்டு துஷ்பிரயோகம் செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவ்வளவு பேர் துஷ்பிரயோகம் செய்த போதிலும், சிறுமி ஏன் கர்ப்பமாகவில்லை என்பதில் காவல்துறையினர் தங்கள் கவனத்தை செலுத்தியுள்ளனர், மேலும் அவர் காவல்துறைக்கு முரண்பட்ட கருத்துக்களை வழங்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

எல்ல ரயில் டிக்கெட் மாபியாவை சேர்ந்த ஒருவர் கைது!

Pagetamil

ஹட்டனில் கரப்பான்பூச்சி சோறு

Pagetamil

மஸ்கெலியாவில் இறந்த நிலையில் புலியின் உடல் மீட்பு

east tamil

கண்டி-மஹியங்கனை வீதி: போக்குவரத்து தடை

east tamil

நானுஓயாவில் குடும்ப தகராறு – ஒருவர் பலி

east tamil

Leave a Comment