லங்கா பிரீமியர் லீக்கில் இருந்து இடைநீக்கப்படுவதற்கு எதிராக யப்னா ஸ்டாலியன்ஸ் அணி சட்ட நடவடிக்கையெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லங்கா பிரீமியர் லீக் அமைப்பாளர்கள் மூன்று அணிகளின் உரிமையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. யப்னா ஸ்டாலியன்ஸ், கொழும்பு கிங்ஸ் மற்றும் தம்புள்ள வைக்கிங் அணிகளே இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
லங்கா பிரீமியர் லீக் அமைப்பாளர்களின் இந்த முடிவை, யப்பான ஸ்டாலியன்ஸ் அணி சவால் செய்துள்ளது.
லங்கா பிரீமியர் லீக் அமைப்பாளர்களிற்கு இது குறித்த சட்ட அறிவிப்பை அனுப்ப இலங்கைக்கு வெளியேயுள்ள ஒரு சர்வதேச சட்ட நிறுவனத்தின் சேவையை யப்னா ஸ்டாலியன்ஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற முதலாவது எல்பிஎல் தொடரை, யப்னா ஸ்டாலியன்ஸ் வென்றது.
தொடரிலிருந்து யப்னா ஸ்டாலியன்ஸை நீக்கும் கடிதம் அமைப்பாளர்களால் அனுப்பப்பட்டுள்ளது. சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்த, இந்த ஆண்டு தொடரில் வாய்ப்பு கிடைத்தால் தொடரில் பங்கேற்க ஆர்வமாக உள்ளதாக யப்னா ஸ்டாலியன்ஸ் அணி தெரிவித்துள்ளது.