இஸ்லாமிய மக்கள் இன்றைய தினம் புதன் கிழமை (21) புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்றனர். நாட்டின் பல பிரதேசங்களில் இஸ்லாமியர்கள் புனித ஹஜ்ஜுப் பெருநாளை சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய மக்களும் இன்றைய தினம் புதன் கிழமை (21) பெருநாளை கொண்டாடுகின்றனர்.
-மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் இன்றைய தினம் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றது.காலை 6.45 மணிக்கு பெண்களுக்கும் காலை 7.30 மணியளவில் ஆண்களுக்கும் பெருநாள் தொழுகை இடம் பெற்றது.
இவ் தொழுகை மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி எம்.அஸீம் தலைமையில் நடைபெற்றது.இதன் போது ஹஜ்ஜுப் பெருநாளின் முக்கியத்துவம், அல்குர்ஆன் சமய நற்சிந்தனைகள், பற்றியும் இங்கு எடுத்து கூறப்பட்டது.
மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படவும் விசேடமாக துவா தொழுகைகள் இடம் பெற்றது. இதன் போது கலந்து கொண்டவர்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக சமூக இடைவெளிகளை பின் பற்றி கலந்து கொண்டனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள ஏனைய பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.