25.4 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இலங்கை

தமிழ்- முஸ்லிம் இனங்களை மோதவிடுவதே இரணைதீவு தெரிவுசெய்யப்பட்டதன் நோக்கம்: சி.சிறிதரன்!

ஜெனிவா அமர்வில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெற்று தமக்கு சாதகமாக்கிக் கொள்வதற்கான முயற்சியே இரணைதீவு ஜனாசா புதைப்பு விவகாரம் என நாடாளுமன்ற உறுப்பினர்
சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாசா புதைப்பு என்பது தொடர்பில் கடந்த நாட்களில் முஸ்லிம் மக்களால் கோரப்பட்டு வந்த முக்கியமான விடயமாகும். அதனை நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்ற போராட்டத்திலும் வலியுறுத்தப்பட்டது.

தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தீர்மானமானது இரு சிறுபான்மை இனங்களிற்குமிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் செயற்பாடாகவே பார்க்க வேண்டும்.

அதாவது இரணைதீவு என்பது கிறிஸ்தவ மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த தீவு. இந்த பிரதேசம் கடந்த 1990முதல் 2017வரை கடற்படையினரின் கிராமமாக இருந்துள்ளது. இது கிளிநொச்சி மாவட்டத்திற்கேயான ஒரு தனித் தீவாகும். அங்கு கடலட்டை உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரம் சார் விடயங்களை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

பெரும் மக்கள் போராட்டத்தின் மூலம் இந்த தீவில் அவர்கள் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இதில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது என்பது ஒரு பொருத்தமான விடயமாக அமையாது.

குறிப்பாக கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கின்ற ஜனாசாக்களை அவர்களுடைய சமய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் இலங்கை அரசு இதனை மறுத்து வந்தது. விஞ்ஞான ரீதியிலும் அடக்கம் செய்யலாம் என கூறப்பட்டது.

தற்போது குறிப்பாக முஸ்லிம்கள் தங்களுடைய ஜனாஸாவை அடக்கம் செய்ய கொஸ்தாவத்தை பகுதியில் இந்த உடல்கள் அடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறு
அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

ஆனாலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட இரணைதீவு என்ற இடத்திலேயே அடக்கம் செய்ததாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பெரும்பான்மையாக கிறிஸ்தவர்களும், தமிழ் மக்களும் வாழுகின்ற ஒரு பிரதேசம் இரணைதீவு. இந்த பிரதேசத்திலேயே ஜனாசாக்களை அடக்கம் செய்வது என்பது ஒரு இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் செயற்பாடாகும்.

இவ்விடயம் தொடர்பில் தமிழ் மக்களும், இஸ்லாமிய மக்களும் நிதானமாக சிந்தித்து செயற்பட வே்ணடும். சிறுபான்மை இனங்களை பிரித்தாளும் கைங்கரியத்தை சிங்கள அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது. சிறுபான்மை இனங்களின் ஒற்றுமையை சிதைப்பதற்கு இவ்வாறான தீர்மானங்களை அவர்கள் எடுக்கின்றார்கள்.

குறிப்பாக ஜெனிவா அமர்வில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெற்று தமக்கு சாதகமாக்கிக் கொள்வதற்கு அரசு முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டிருநுத்ரார்.

ஜனாசா புதைப்புக்கு தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டால் அதற்கு ஆதரவாக செயற்படுவீர்களா என ஊடகவியலாளர் அவரிடம் வினவியபோது,

அரசு குறித்த நடைமுறையை அமுல்படுத்துமிடத்து அவ்விடயம் தொடர்பில் நிதானமாகவே சிந்தித்து செயற்படுவோம். போராட்டங்களில் ஈடுபடுவது உள்ளிட்ட
விடயங்களை அந்தந்த நேரங்களில் ஆராய்ந்தே செயற்படுவோம் எனவும் தெரிவித்த சிறிதரன், சிறுபான்மை இனங்களிற்கிடையிலான முரண்பாட்டை தவிர்க்கம் வகையில் சந்தர்ப்ப சூழிநிலைக்கேற்ப நடந்து கொள்ளவும், சிந்தித்தும் செயற்பட
உள்ளதாகவும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரயிலில் தவறவிடப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

east tamil

முல்லைத்தீவில் வினோதமான திருட்டு

east tamil

UPDATE: ‘மாமா பணத்தை தராததால் மாணவியை கடத்தினேன்’: மச்சான் கூறிய காரணம்!

Pagetamil

ரோஹிங்கிய முஸ்லிம் தொடர்பில் மீள குற்றப்புலனாய்வு விசாரணை

east tamil

தமிழ் மக்களின் போர்க்கால வாழ்க்கையை ஆவணமாக்கியவர் காலமானார்!

Pagetamil

Leave a Comment