விக்ரம்: ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Date:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், விக்ரம் மூவரின் முகங்களில், ஒரு ஒரு புறமும் மூவரின் முகங்கள் கொண்டதாக அமைந்துள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவப்பு நிறத்தில் code red என்ற வாசமும் இடம்பெற்றுள்ளது.

1986ஆம் ஆண்டு வெளியான விக்ரம் என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன், சத்யராஜ், அம்ஜத்கான், அம்பிகா, சாருஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அப்போதைய காலகட்டத்தில் தமிழ் திரைப்பட உலகில் ஒரு கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான முதல் திரைப்படம் விக்ரம். போலீஸ் அதிகாரியாக கமல்ஹாசனின் நடிப்பு அனைவராலும் பெரிதாக பேசப்பட்டது.

தற்போது 34 ஆண்டுகளுக்கு பிறகு அதே பெயரில் கமல்ஹாசன் நடிக்கவிருப்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டைட்டில் டீசரை வைத்து பார்க்கும் போது கிட்டத்தட்ட இந்தியன் படத்தை போலவே இருந்தாலும், லோகேஷ் கனகராஜின் முந்தைய கதைகளை கொண்டு ஆராய்ந்து பார்க்கும் போது நிச்சயம் படம் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் இணையங்களில் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது விருமாண்டி படத்தின் போஸ்டரை ஒத்தே வெளிவந்துள்ளால் வித்தியாசமான திரைக் களத்தில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் கேட்டதால் பேச்சு நடத்த தயார்… ஆனால் போர் நிறுத்தம் முறிந்து விட்டது!

பேச்சுவார்த்தைகளைத் தொடர ஈரான் கோரியதாகவும், அதற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் போர்...

யாழில் இளைஞனை கடத்தி சித்திரவதை செய்த கும்பல் கைது!

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை கடத்தி சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர்...

கரூரில் தவெகவின் அலட்சியத்தால் உயிரிழந்த 31 பேருக்கு அரசுப்பணி!

கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரில் 31 பேருக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்