இயக்குனர் மிஷ்கின் மற்றும் அதர்வா கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படம் அடுத்த ஆண்டு துவங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தின் நடிகர் அதர்வா நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வருகிறது. மிஷ்கின் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். ‘பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பை முடித்த உடன் மிஷ்கின் இந்தப் படத்தின் பணிகளைத் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிஷ்கின் மற்றும் அதர்வா இருவரும் மூன்று மாதங்களுக்கு முன்பு இந்தப் படம் குறித்து விவாதிப்பதற்காக சந்தித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மிஷ்கின் கதை அதர்வாவுக்கு பிடித்ததால் அவர் நடிக்கச் சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்தப் படத்தின் பணிகள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் அதர்வா இயக்குனர் சற்குணம் உடன் கூட்டணி அமைக்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் விரைவில் இணைவார் என்று கூறப்படுகிறது. ‘சண்டி வீரன்’ படத்தை அடுத்து இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி இணைகின்றனர்.
மறுபுறம், மிஷ்கின் அருண் விஜய் மற்றும் சிம்பு ஆகியோருடனும் ஒவ்வொரு படங்களில் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.