27 C
Jaffna
December 29, 2024
Pagetamil
லைவ் ஸ்டைல்

ஆபத்தை ஏற்படுத்தும் ‘நள்ளிரவு பிரியாணி’!

இரவு பணியில் அலுப்பு ஏற்படும்போதும், பசியை உணரும்போதும், ஹோட்டல்களுக்கு சென்று, நேரம் காலம் பார்க்காமல், பிரியாணியை வெளுத்து கட்டுகிறார்கள்.

இரவு பணியில் அலுப்பு ஏற்படும்போதும், பசியை உணரும்போதும்,  ஹோட்டல்களுக்கு சென்று, நேரம் காலம் பார்க்காமல், பிரியாணியை வெளுத்து கட்டுகிறார்கள். இதையே வழக்கமாக்கி, தினமும் நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுவது, உடல்நலத்திற்கு கெடுதியாக அமையும் என்கிறார்கள், மருத்துவர்கள். ஏனெனில் இறைச்சியும், பிரியாணியை சுவையூட்டும் எண்ணெய் பொருட்களும், செரிமான பிரச்சினைகளை உருவாக்குவதோடு, மனித உடலின் இயல்பான இயக்கத்தையும் சீர்குலைத்துவிடுமாம்.

நள்ளிரவு பிரியாணிக்கு குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை பயன்படுத்தினால் இருமடங்கு பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கிறார்கள். சில ஹோட்டல்களில், பிரியாணியை மீண்டும் சூடுபடுத்தி பரிமாறும் பழக்கம் இருப்பதுண்டு. அப்படி என்றால், பாதிப்பு மிக அதிகம் என பதற வைக்கிறார்கள், மருத்துவர்கள். அதனால் நள்ளிரவில், இதுபோன்ற ‘ஹெவி’ உணவுகளை தவிர்க்கும்படி கூறுகிறார்கள்.

பிரியாணி மட்டுமின்றி, நள்ளிரவில் பீட்சா, பாஸ்தா, நூடுல்ஸ், சாக்லெட், காரமான இறைச்சி, சோடா பானங்களையும் தவிர்க்க சொல்கிறார்கள். நள்ளிரவில் கண்விழித்து பணியாற்ற, டீ-காபி மட்டும் போதுமானது என்பவர்கள், இரவு பசிக்கு இட்லி, இடியாப்பம், தோசை ஆகியவற்றை சாப்பிடுவதுதான் நல்லது என்று அறிவுறுத்துகிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment