முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் கொலனி பகுதியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த வேளை மின்சாரம் தாக்கி குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1