பாகுபலி பாணியில் வெளியாகும் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’!

Date:

விக்ரம் – கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகி உள்ள துருவ நட்சத்திரம் படத்தை திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். பார்த்திபன், ரீத்துவர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் பட வேலைகளை 2017-ம் ஆண்டிலேயே தொடங்கினர். வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில பிரச்சினைகளால் தள்ளிப்போனது. பின்னர் 2020-ல் வெளியாகும் என்று எதிர்பார்த்து அப்போதும் வரவில்லை. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக மீண்டும் முடங்கியது.

இந்நிலையில், கொரோனா பரவல் குறைந்து வருவதால், படத்தை திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் காட்சிகள் 4½ மணி நேரம் ஓடக்கூடிய வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே துருவ நட்சத்திரம் படத்தை பாகுபலி போன்று 2 பாகங்களாக வெளியிட படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்