இணையத்தளத்தில் விற்பனை செய்யப்பட்ட15 வயது சிறுமியின் தாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதிவான் லோகன அபேவிக்ரம, அந்த பெண்ணை தலா ரூ .1 மில்லியன் பெறுமதியான இரண்டு பிணைகளில் விடுவித்தார்.
அந்த பெண் 3 மாத கர்ப்பிணியாக இருப்பதால் பிணையில் விடுவிக்க வேண்டுமென அவர் சார்பில் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதேவேளை, மிஹிந்தலை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மற்றும் இரண்டு பேரை ஜூலை 9 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டது.
அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ஆஜர்படுத்த நீதிவான் உத்தரவிட்டார். சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து நபர்களையும் அவர்களின் அந்தஸ்தை பொருட்படுத்தாமல் கைது செய்யும்படி அவர் குழந்தை மற்றும் பெண்கள் பணியகத்திற்கு உத்தரவிட்டார்.
15 வயது சிறுமியை பாலியல் ரீதியாக விற்பனை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 34 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.




