ராதிகா மூலம் வெப் தொடரில் அறிமுகமாகும் சரத்குமார்!

Date:

சரத்குமார் அறிமுகமாகும் வெப் தொடரை நடிகை ராதிகா, தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

வெப் தொடர்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதனால் முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள். ஏற்கனவே ரம்யாகிருஷ்ணன், சோனியா அகர்வால், பாபி சிம்ஹா, மீனா, நித்யா மேனன், சீதா ஆகியோர் வெப் தொடர்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சரத்குமாரும் வெப் தொடரில் நடிக்கிறார். இதனை நடிகை ராதிகா சரத்குமார் சமூக வலைதளத்தில் தெரிவித்து உள்ளார். சரத்குமார் அறிமுகமாகும் வெப் தொடருக்கு ‘இரை’ என பெயரிடப்பட்டு உள்ளது. கமலின் தூங்காவனம், விக்ரமின் கடாரம் கொண்டான் போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா, இந்த வெப் தொடரை இயக்க உள்ளார்

இரை வெப் தொடர் குழுவினர்

கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த வெப் தொடரை ராதிகா சரத்குமார், தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த வெப் தொடருக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்