தனுஷ் – கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டி43’ என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் முதல் இரண்டக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி முடிவுற்றது. இதையடுத்து நடிகர் தனுஷ் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படத்தில் பிசியாகி நடித்து வந்தார். தற்போது அமெரிக்காவிலிருந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஐதராபாத் திரும்பினார். இந்நிலையில் டி43 படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது.

இதற்காக படத்தில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளனர். அதேபோன்று நடிகை மாளவிகா மோகனனும் படபப்பிடிப்பில் கலந்துக்கொள்ள ஐதராபாத் சென்றுள்ளார். இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும் என தெரிகிறது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் விரைவில் ஃப்ர்ஸ்ட் லுக்கையும், திரையரங்கில் வெளியிடும் தேதியும் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.



