Pagetamil
முக்கியச் செய்திகள்

யாழ் மாவட்ட வீடமைப்பு திட்டத்தில் அங்கஜன் தரப்பின் தலையீட்டிற்கு ஆப்பு: பட்டியலை புதிதாக தயாரிக்க உத்தரவு!

யாழ் மாவட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அங்கஜன் இராமநாதனின் அதிகரித்த அரசியல் தலையீட்டிற்கு ஆப்பு அடிக்கப்பட்டுள்ளது. அரச நிவாரணங்கள், உதவி திட்டங்களை தம் ஊடாக மேற்கொள்வதாக பயனாளிகளிடம் கூறி அரசியல் செய்யும் குற்றச்சாட்டுக்கள் அரச உயர்மட்டத்திற்கு சென்றதையடுத்து, இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்த்திட்ட பயனாளிகள் தெரிவில், அங்கஜன் இராமநாதன் தரப்பின் அரசியல் தலையீடு காணப்பட்டதால், ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் அடிப்படையில் வீட்டுத்திட்டத்தை முன்னகர்த்த வேண்டாம், வெளிப்படைத்தன்மையுடன் பயனாளிகள் பட்டிலை தயார் செய்யுமாறு யாழ் மாட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலாளர்களிற்கும், மாவட்ட அரசாங்க அதிபரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

புள்ளித்திட்டத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் பயனாளிகள் பட்டியலை நானை முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை, அந்தந்த பிரதேச செயலகம், கிராம சேவகர் அலுவலகம், கிராம மட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அரசியல் தலையீட்டினால் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில், சில வீட்டுதிட்டங்களிற்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், புதிய அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், அங்கஜன் இராமநாதன் தரப்பினரால் இணைக்கப்பட்ட பயனாளிகள் நீக்கப்படும் நிலைமையேற்பட்டுள்ளது.

 

பயனாளிகள் தெரிவில்  இடம்பெற்ற குளறுபடிகளை சரிசெய்ய பின்வரும் நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

 

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மிகப்பெரிய கொள்கை மாற்றம்: உள்ளூராட்சி தேர்தலில் சில தரப்புக்களுடன் கூட்டணி!

Pagetamil

உலகையே உலுக்கிய பாகிஸ்தான் ரயில் பயணிகள் கடத்தல்: பிந்திய நிலவரம்!

Pagetamil

நாடளாவிய ரீதியில் இன்று வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Pagetamil

‘போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நீதி வழங்கப்படவில்லை’: ஏற்றுக்கொண்டார் ரணில்!

Pagetamil

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

Leave a Comment