இலங்கை-இங்கிலாந்துக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. .இதன்மூலம், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
முதலில் ஆடிய இலங்கை 41.1 ஓவர்களில் சகல விக்கெட்டையும் இழந்து 166 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் தசுன் சானக ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் சாம் கரண் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
இங்கிலாந்து துடுப்பெடுத்தாட மழை அனுமதிக்கவில்லை.
தொடரை கைப்பற்றியதன் மூலம், ஐ.சி.சி ஒருநாள் சூப்பர் லீக் புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து முதலிடத்தை பிடித்தது. ஆட்டம் கைவிடப்பட்டால் கிடைத்த 5 புள்ளிகளுடன் தென்னாபிரிக்கா மற்றும் சிம்பாவேயை கடந்து, 11வது இடத்திற்கு இலங்கை முன்னேறியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1