தனது காதலை ஏற்க மறுத்த பாடசாலை மாணவியை கண்மூடித்தனமாக கத்தியால் குத்தி கொல்ல முயன்ற காதல் வெறியனை பொலிசார் தேடி வருகின்றனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தம்புள்ளை பன்னம்பிடிய, மெனிக்தென பிரதேசத்தை சேர்ந்த அனுஷா செவ்வந்தி என்ற 16 வயதுடைய மாணவியே பாதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் உயிரிழந்துள்ள நிலையில், சிறுமி மற்றும் அவரது இளைய சகோதரன் தனது பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சிறுமியிடம் இளைஞன் ஒருவன் தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு கோரி வந்துள்ள நிலையில் அதனை சிறுமி நிராகரித்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 30 ஆம் திகதி குறித்த சிறுமியின் வீட்டுக்கு வந்த குறித்த இளைஞன் கூரிய ஆயுதத்தால் சிறுமியை கொடூரமாக தாக்கியுள்ளான்.
சம்பவம் தொடர்பில் சிறுமியின் பாட்டி தெரிவித்ததாவது,
என்னிடம் ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டான், நானும் கொடுத்தேன். பின்னர் வீட்டுக்கு வந்த நபருக்கு தேனீர் வழங்குவதற்காக நான் சமையல் அறைக்கு சென்றேன். சமையல் அறையில் இருக்கும் போது எனக்கு சத்தம் ஒன்று கேட்டது. அப்போது மகள் மேசைக்கு அருகில் இருந்து அம்மா என்று சத்தமிட்டாள். தலை மேசையில் இருந்தது. அவன் தப்பித்து ஓடினான். பின்னர் நான் அவனை பின்தொடரவில்லை என்றார்.
தாக்குதலில் படுகாயம் அடைந்த சிறுமி தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
26 வயதுடைய சந்தேகநபர் மாத்தளை, மகாவேல பகுதியில் வசிப்பவர். பதுளை பகுதியில் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். தற்போது, பன்னம்பிட்டி மெனிக்தென பிரதேசத்தில் பதுங்கி இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இரண்டு பொலிஸ் குழுக்கள் அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
காயமடைந்த சிறுமிக்கு 10 மணித்தியால அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.