நேற்று 30.6.2021 பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் செக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் வைத்தியர். லோஹித சமரவிக்ரம ஆகியோருக்கிடையிலான நற்புறவு சந்திப்பொன்று பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது கிழக்கு மாகாணத்தில் முன்னேடுக்கப்படுவதற்க்காக கல்வி, சுகாதார மற்றும் பொருளாதார, விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான யோசனைகள் தெரிவிககப்பட்டதுடன் இதன் போது அமைச்சரினால் செக் நாட்டினூடாகவும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினூடாகவும் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு செக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் வைத்தியர். லோஹித சமரவிக்ரம அவர்களுக்கு முன்வைக்கப்பட்டதுடன் இந்த கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி யோசனைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக செக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் அவர்களினால் தெரிவிக்கப்பட்டது
இச்சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் லோஹித சமரவிக்ரம மற்றும் பிரதமரின் இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான் இ அமைச்சின் செயலாளர் வைத்தியர் அமல் ஹரிசத டி சில்வா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
-அமைச்சரின் ஊடக பிரிவு-