தென்மராட்சியில் அயலவர்களிற்கிடையில் மோதல்: 4பேர் வைத்தியசாலையில்!

Date:

தென்மராட்சி பகுதியில் அயலவர்களிற்கிடையில் இன்று இடம்பெற்ற மோதலில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மீசாலை, பங்களா வீதியில் இன்று மாலை இந்த சம்பவம் நடந்தது.

அயல் வீட்டுக்காரர்களிற்குள் ஏற்பட்ட தகராறு முற்றி, மோதலாகியுள்ளது. அயல் வீட்டு குழுவொன்று, வீடு புகுந்து தாக்கியதில் பா.கருணாமூர்த்தி (56), மனைவியான கருணாமூர்த்தி ரோகிணி (46), மகன் க.தனுசன் (26) ஆகியோரும்,  அயல்வீட்டு தரப்பில் ஐ.நடேசபிள்ளை (63) என்பவரும் படுகாயமடைந்தனர்.

அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ வழக்கறிஞராக நியமனம்

சர்ச்சைக்குரிய குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில்...

பாடசாலைக்கால காதலர்களின் உடல் ஒன்றாக அடக்கம்

ஹெனேகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம்ஜோடி உயிரிழந்துள்ளது. கடந்த 9ஆம் திகதி இந்த...

மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்து ஓட்டுநருக்கு விளக்கமறியல்

கெஸ்பேவ-கொழும்பு வீதியில் உள்ள மிரிஸ்வத்த பகுதியில் 'மெட்ரோ' (Metro) பேருந்துடன் வேண்டுமென்றே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்