மன்னார் மாவட்டத்தில் அதிகரித்த ‘கொரோனா’ தொற்று காரணமாக தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் தலைமன்னார் பியர் கிழக்கு ஆகிய இரு கிராம அலுவலர் பிரிவுகள் கடந்த வாரம் முடக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் நேற்று, இன்றும் பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை தலைமன்னார் பியர் பகுதியில் 62 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த இரு கிராம அலுவலகர் பிரிவுகளும் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்ட நிலையில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை ஆகியவை இணைந்து பீ.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுத்தனர்.
அந்த வகையில் மொத்தமாக 368 நபர்களுக்கான பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மாதிரிகள் கொழும்பு முல்லேரியா வைத்தியசாலைக்கு மேலதிக பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அனுப்பி வைக்கைப்பட்ட மாதிரிகளில் தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் தொற்று உறுதி செய்தப்பட்ட நபர்களின் முதல் நிலை தொடர்பாளர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.