உணவுக்கட்டுப்பாடாக இருக்கவும் ஆசை… உணவை கண்டால் மனதை அடக்க முடியாமல் இருக்கிறது என அங்கலாய்ப்பவர்களிற்காகவே பற்களிற்கு பூட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்று உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் அதிகமாகி வருகின்றனர். குறிப்பாக உட்கார்ந்த இடத்திலிருந்த வேலை பார்ப்பவர்கள் பலருக்கு இந்த உடல் பருமன் அதிகமாகியுள்ளது. இதற்கு முக்கியமான பழக்கம் இவர்களது தவறான உணவு பழக்க வழக்கம் தான். அதன்பின்பு அவர்கள் அந்த உடல் எடையை குறைக்க ஜிம்மிற்கு செல்வது, பல உடல் எடையை குறைக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவது என காசை வீணாக்குவாரகள். இது எதுவுமே பலருக்கு பலன் தருவதில்லை.
இவை எல்லாம் பயன் தரவேண்டும் என்றால் முதலில் வாயை கட்டுப்படுத்த வேண்டும். வாயை கட்டுப்படுத்தினால் மட்டுமே மற்ற விஷயங்கள் பலன் தர துவங்கும் என வைத்தியர்கள் சொல்லுகின்றனர்.
இப்படியான மனிதர்கள் உடல் எடையை குறைக்க மற்ற பயிற்சிகளை தொடங்கும் முன் தன் வாயை கட்டுப்படுத்த புதிய கருவி ஒன்றை நியூசிலாந்தில் உள்ள ஓடாகோ பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் சேர்ந்து கண்டுபிடித்துள்ளனர்.
டெண்டல் ஸ்லிம் டயட் கொன்ட்ரோல் (Dental Slim Diet Control) என பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம், உலகின் முதலாவது எடை இழப்பு சாதனமாக குறிப்பிடப்படுகிறது.
இந்த கருவி வாய்க்குள் மேல் மற்றும் கீழ் பல்லிற்கு இடையே பொருத்தப்படுகிறது. இது தனித்துவமான தனிப்பயனாக்கப்பட்ட பூட்டுதல் போல்ட்களுடன் காந்த சாதனங்களைப் பயன்படுத்துகிறது. இது அணிந்தவருக்கு 2 மிமீ மட்டுமே வாயைத் திறக்க அனுமதிக்கிறது, அதாவது திரவ உணவை மட்டுமே உட்கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் அணிந்திப்பவரின் உரையாடலை கட்டுப்படுத்தாது. சுவாசத்திற்கும் சிக்கலில்லை.
அதனால் நீங்கள் தேவையில்லாத உணவுகளை சாப்பிட முடியாது.
இந்த கருவி 7 பெண்களிடம் முதலில் பரிசோதனை செய்யப்பட்டது. சுமார் 1 வாரம் நடந்த சோதனையில் அவர்கள் ஒட்டு மொத்த உடல் எடையில் சராசரியாக 5.1 சதவீதம் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து பேராசிரியர் போல் பர்டான், இந்த சாதனம் உடல் பருமனுடன் போராடும் மக்களுக்கு பயனுள்ள, பாதுகாப்பான மற்றும் மலிவு கருவியாக இருக்கும். இது ஒரு பல் மருத்துவரால் பொருத்தப்பட்டுள்ளது, அவசர காலங்களில் பயனரால் கழற்றப்படலாம் மற்றும் மீண்டும் மீண்டும் பொருத்தப்பட்டு அகற்றப்படலாம். இந்த சாதனத்தில் எந்தவிதமான மோசமான விளைவுகளும் இல்லை.” என்றார்.
Otago and UK researchers have developed a world-first weight-loss device to help fight the global obesity epidemic: an intra-oral device that restricts a person to a liquid diet. Read more: https://t.co/eLhXwipiqs pic.twitter.com/Of6v3uvVbX
— University of Otago (@otago) June 28, 2021
உடல் எடையை குறைக்க வாய்க்கு பூட்டு போடும் கருவியை கண்டுபிடித்தது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.