பயங்கரவாதத்துக்கான டிரோன்கள் உலகளாவிய ஆபத்து – ஐ.நா.வில் இந்தியா கருத்து!

Date:

ஜம்மு விமானப் படைதளத்தில் டிரோன்கள் மூலம் வெடிகுண்டுகள் வீசப்பட்டதில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் விமான நிலையத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதிகள் டிரோன்கள் மூலம் இரட்டை வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் விமானப்படை வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், ஐ.நா. பொதுக்குழுவில் உலகளாவிய பயங்கரவாதம் குறித்த விவாதத்தின்போது ஜம்மு காஷ்மீர் விமானப்படை தளம் மீதான தாக்குதல் குறித்து பிரச்சினை எழுப்பிய இந்தியா, பயங்கரவாதத்துக்கான டிரோன்கள் உலகளாவிய ஆபத்து என கருத்து தெரிவித்தது.

மேலும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆயுதம் ஏந்திய டிரோன்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து சர்வதேச சமூகம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியது.

இதுகுறித்து இந்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் வி.எஸ்‌.கே.கவுமுடி கூறுகையில், குறைந்த விலை மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய டிரோன்களை பயங்கரவாத குழுக்கள் மோசமான நோக்கங்களுக்காக பயன்படுத்துவது உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உடனடி ஆபத்து மற்றும் சவாலாக மாறியுள்ளது. வணிக சொத்துக்களுக்கு எதிராக பயங்கரவாத குழுக்கள் டிரோன்களைப் பயன்படுத்துவதற்கான சாத்திய கூறுகளில் சர்வதேச சமூகம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்