8,000 தெரு நாய்களைக் காப்பாற்றி வளர்த்து வரும் பௌத்த துறவி-வைரல் வீடியோ!

Date:

சீனத் துறவி ஒருவர் சுமார் 8,000 தெரு நாய்களைக் காப்பாற்றி வளர்த்து வருகிறார். இவரது சேவை தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜி சியாங் சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த ஒரு பௌத்தத் துறவியாவார். 51 வயதான ஜி சியாங் தனது நம்பிக்கையின் ஒரு பகுதியாக 1994 முதல் ஷாங்காய் தெருக்களில் கைவிடப்பட்ட விலங்குகளை மீட்டு, தம்முடைய ஆலயத்திலோ விலங்குகள் காப்பகத்திலோ அவற்றுக்குப் புது வாழ்க்கை அமைத்துக் கொடுக்கிறார்.

அவர் சுமார் 8,000 நாய்களைப் பராமரித்து வருகிறார். அதற்காக, ஆண்டுக்கு சுமார் 2 மில்லியன் டொலர் செலவிடுகிறார். நாய்களுக்காக மாதந்தோறும் 60 டன் உணவு வாங்குகிறார்.

https://twitter.com/i/status/1407198483602309121

மேலும், சில நூறு நாய்களை ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கு அவற்றை வளர்க்க விரும்பும் மனிதர்களுடன் அனுப்பி வைக்கிறார்.கிட்டத்தட்ட 3 சதாப்தங்களாக தனது சேவையை செய்துவரும் ஜி சியாங், தாம் காப்பாற்றவில்லை என்றால், அந்த நாய்கள் நிச்சயம் இறந்துவிடும் என்கிறார்.

இந்த சேவையை தொடங்கியதிலிருந்து, நாய்களை மட்டுமல்ல, தெருக்களில் உலவித் திரியும் பூனை உள்ளிட்ட விலங்குகளையும் காப்பாற்றிப் பராமரிக்கிறார். சீனாவில் தெரு நாய்களின் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்துள்ளது. அங்கு சுமார் 50 மில்லியன் விலங்குகள் தெருக்களில் சுற்றித் திரிவதாகக் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகிக் கொண்டிருக்கிறது.

 

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்