27.1 C
Jaffna
January 13, 2025
Pagetamil
தமிழ் சங்கதி

தமிழ் அரசு கட்சி செயலாளர் விவகாரத்தால் வடக்கு, கிழக்கு சர்ச்சை!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளரை நிரந்தரமாக்கும் எந்த முயற்சியையும் இப்போதைக்கு எடுப்பதில்லையென இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது. முக்கிய பதவிகளை வடக்கிற்கு வழங்கும் விமர்சனம் கிழக்கில் ஏற்படலாமென்பதால், எதிர்வரும் மாகாணசபை தேரதல் வரையாவது நிரந்தர செயலாளர் நியமனத்தை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெற்றது. இதன்போது, செயலாளர் விவகாரம் வடக்கு, கிழக்கு சர்ச்சையால் தள்ளி வைக்கப்பட்டதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொது செயலாளராக ப.சத்தியலிங்கம் செயற்பட்டு வருகிறார். கிழக்கை சேர்ந்த கி.துரைராசசிங்கம் செயலாளராக பதவிவகித்த போது, கட்சிக்கு தெரியாமல் திருட்டுதனமாக தேசியப்பட்டியல் வழங்கிய விவகாரத்தில் பதவியை இழந்தார்.

அதன்பின் பதில் பொதுசெயலாளராக ப.சத்தியலிங்கம் செயற்பட்டு வருகிறார்.

இன்றைய கூட்டத்தில் கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கட்சியின் பொதுக்குழுவை கூட்டி, ப.சத்தியலிங்கத்தின் நியமனத்தை நிரந்தரமாக்கலாமென யோசனை தெரிவித்தார்.

எனினும், கட்சியின் வாலிபர் முன்னணி பிரமுகர் பீற்றர் இளஞ்செழியன் அதை ஆட்சேபித்தார். செயலாளர் பொறுப்பில் கிழக்கை சேர்ந்தவரே நியமிக்கப்பட வேண்டும், அது கிழக்கிற்குரியது என அழுத்திச் சொன்னார்.

கிழக்கை சேர்ந்த மத்தியகுழு பிரதிநிதிகளும், அது கிழக்கிற்கே வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டனர்.

“வடக்கு என்றால் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களிற்கு பதவி வழங்கப்படுகிறது. அல்லது கிழக்கு என்கிறார்கள். இப்படி பார்த்தால் வன்னி பாதிக்கப்படுகிறது“ என்றார்.

எனினும், கிழக்கு பிரதிநிதிகள் செயலாளர் விவகாரத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை எடுத்தனர்.

முன்னாள் எம்.பி பா.அரியநேத்திரன் கருத்து தெரிவித்த போது, ஒற்றுமை முயற்சி, கூட்டு முயற்சி என பலது நடக்கிறது. அனைத்திலும் வடக்கிலுள்ளவர்கள்தான் கலந்து கொள்கிறார்கள். வவுனியா கூட்டத்தில்தான் கிழக்கிலிருந்து 2 பேர் கலந்து கொண்டனர். கிழக்கில் ஏனைய கட்சிகளால் கூட்டமைப்பிற்கு எதிராக இது தீவிரமான பிரச்சாரமாக முன்னெடுக்கப்படுகிறது. செயலாளர் பதவியையும் சத்தியலிங்கத்திற்கு வழங்கினால் கிழக்கில் பெரும் விமர்சனம் எழும். எம்மால் முகம் கொடுக்க முடியாது. பிள்ளையான் தரப்பு உள்ளிட்டவர்கள் அதை தீவிரமான பிரச்சாரமாக முன்னெடுப்பார்கள். நீங்கள் யாருக்காவது செயலாளர் பதவியை கொடுங்கள். அதனால் இப்போதைக்கு பொதுக்குழுவை கூட்டி செயலாளர் பதவியை வழங்க வேண்டுமென்றார்.

செயலாளர் பதவி கிழக்கிற்குரியது, அதை கொடுத்தே தீர வேண்டுமென பி.இளஞ்செழியனும் தொடர்ந்து வலியுறுத்தினார்.

இதனால், செயலாளர் நியமனத்தில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

மாவை கட்சியின் தலைவரா?… இல்லையா?: 5 மணித்தியாலங்கள் மல்லுக்கட்டியும் தமிழரசு மத்தியகுழுவில் முடிவில்லை!

Pagetamil

தேர்தல் தோல்வியுடன் சங்கு அணியில் குழப்பம்: 3 சிறிய கட்சிகளை வெளியே அனுப்ப முயற்சி!

Pagetamil

உட்கட்சி மோதலால் திண்டாடும் ரெலோ!

Pagetamil

சந்திக்கு வருகிறது உள்வீட்டு மோதல்: ரெலோவும் நீதிமன்ற படியேறுகிறது!

Pagetamil

Leave a Comment