ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாடாளுமன்றத்தில் 13ஆம் இலக்க ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
13ஆம் இலக்க ஆசனத்திற்குரியவரான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 14ஆம் இலக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
முன்னதாக, ரணில் விக்கிரமசிங்கவிற்கு 16ஆம் இலக்க ஆசனம் ஒதுக்கப்பட்டதாகவும், எனினும், அதை ரணில் விரும்பாமல், கடிதம் மூலம் அறிவித்திருந்ததாகவும் தகவல் வெெளிௌயாகியுள்ளது.
16ஆம் இலக்க ஆசனம் ஜேவிபி தலைவர் அநுரகுமார திசாநாயக்கவிற்குரியது.
ரணில் விக்கிரமசிங்க நாளை (13) நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1