12 கொள்ளை சம்பவங்கள், வீடு உடைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிங்குராங்கொட பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
ஹிங்குராங்கொட விமானப்படை தளத்தில் இணைக்கப்பட்டிருந்த ஒருவரே இந்த திருட்டுக்களில் ஈடுபட்டுள்ளார்..
2019 ஆம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளாக அவர் திருட்டுக்களில் ஈடுபடுவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வீடு உடைத்து நகை உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருடப்படுவது தொடர்பாக ஹிங்குராங்கொட பொலிசாருக்கு தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்து வந்தன. இதனடிப்படையில், சி.சி.டி.வி காட்சிகளை காவல்துறையினர் கண்காணித்து, 28 வயதான விமானப்படை சிப்பாயை கைது செய்தனர்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அவர் வசமிருந்த வாகனமொன்றையும் பொலிசார் மீட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1