ரஸ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்கும் அமெரிக்கா

Date:

அலெக்சி நவால்னி விவகாரத்தில் ரஸ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அமெரிக்கா கூறி வருகிறது.மேலும் இந்த விவகாரத்தில் அமெரிக்கா ரஷியா மீது ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இந்த சூழலில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் ரஸ்ய அதிபர் புதினை முதல் முறையாக நேரில் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது அவர் அலெக்சி நவால்னி விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்பினார். ஆனாலும் இந்த பேச்சுவார்த்தை இணக்கமாக நடைபெற்றதாக புதின் தெரிவித்தார்.இந்த நிலையில் அலெக்சி நவால்னி விவகாரத்தில் ரஷியா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இதுபற்றி அவர் கூறுகையில் ‘‘அலெக்சி நவால்னி வழக்கில் ரஸ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளின் மற்றொரு தொகுப்பை நாங்கள் தயார் செய்து வருகிறோம். நாங்கள் சரியான இலக்குகளை பெற தொகுப்புகளை உருவாக்கியுள்ளோம் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பொருளாதார தடை அறிவிப்பு வெளியாகும். அதைசெய்யும்போது ரசாயன ஆயுதங்கள் தொடர்பாகவும் மேலும் பொருளாதார தடைகளை விதிப்போம்’’ என கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

ஜானகி சிறிவர்த்தனவுக்கு விளக்கமறியல்

க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன எதிர்வரும் ஒக்டோபர் 6...

அனோஜன் விவகாரத்தில் அரசியல்வாதிகள் நிதானமாகச் செயற்பட வேண்டும்-உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் வலியுறுத்தல்

சவூதி அரேபியாவில் தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் சிவராசா அனோஜன் விடயத்தில்,...

‘மென்மையான தண்டனை வழங்குங்கள் என கேட்க வெட்கப்படுகிறேன்’: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயங்கரவாதிகள் நீதிமன்றத்தில் கூறியவை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான முக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்