சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற இலங்கையர்கள்: இந்தியாவிற்குள் நுழைந்த விதத்தை கடற்கரையில் ஒத்திகை செய்து காட்டினர்!

Date:

இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக கனடா செல்ல தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்கள் மங்களுர்வில் வைத்து கைது செய்யப்பட்டனர். அவர்களில் நால்ரை மங்களூர் தனிப்படை போலீசார் வேதாளை கடற்கரைக்கு அழைத்து வந்து இன்று விசாரணை செய்தனர். மேலும் தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்களுக்கு தங்க அடைக்கலம் கொடுத்த முக்கிய குற்றவாளி தலைமறைவானதால் அவர் குறித்தும் மங்களூர் தனிப்படை போலீசார் மரைக்காயர்பட்டிணத்தில் தீவிர விசாரணை நடத்தி சென்றனர்.

இலங்கையை சேர்ந்த 34 இலங்கை தமிழர்கள் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கனடா செல்வதற்காக கடந்த மாதம் 27ந் திகதி புத்தளம் கடற்கரையில் இருந்து புறப்பட்டனர். அவர்கள் மறுநாள் அதிகாலை ராமநாதபுரம் மாட்டம் ராமேஸ்வரம் அடுத்த வேதாளை கடற்கரையை வந்து சேர்ந்தனர். பின்னர் வேதாளையில் இருந்து மங்களூர் சென்று கடல் வழியாக கனடா நாட்டிற்கு தப்பி செல்ல முயன்ற போது கடந்த 11ஆம் திகதி மங்களூர் போலீசாரல் 34 இலங்கை தமிழர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 34 இலங்கை தமிழர்களில்; நான்கு பேரை மட்டும் போலீஸ் காவலில் எடுத்த மங்களூர் போலீசார் அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்களை திரட்டுவதற்காக விசராணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்ட 4 இலங்கை தமிழர்களை ராமேஸ்வரம் அடுத்துள்ள வேதளை கடற்கரைக்கு அழைத்து வந்த மங்களூரை சேர்ந்த ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், காவலர்கள் என 7 பேர் கொண்ட தனிப்படை இலங்கையிலிருந்து எப்படி கடற்கரையில் வந்து இறங்கினார்கள், அங்கிருந்து எப்படி மரைக்காயர் பட்டிணத்தில் உள்ள வீட்டில் தங்கி இருந்தனர் என்பது குறித்து அவர்களை வைத்து ஒத்திகை நடத்தி அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

மேலும் சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்களை அடைக்கலம் கொடுத்து தங்க உதவிய முக்கிய குற்றவாளியான இம்ரான் கான் தலை மறைவாகியுள்ளதால் மரைக்காயர்பட்டிணத்தில் உள்ள அவரது வீட்டிற்கு தனிப்படை போலீசார் சென்றனர் அப்போது வீடு பூட்டி இருந்ததால் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர்.

விசாரணையில் இம்ரான் கான் ஒரு வாரத்திற்கு மேலாக மரைக்காயர்பட்டிணத்தில் இல்லை என்பது தெரியவந்ததையடுத்து அடுத்த கட்ட விசாரணை செய்வதற்காக தற்போது கைது செய்யப்பட்டு மங்களூரில் இருந்து அழைத்து வரப்பட்ட 4 இலங்கைத் தமிழர்களை கடற்கரை வழியாக எங்கெல்லாம் அவர்கள் சென்றார்கள் யாரெல்லாம் சந்தித்தார்கள் என் ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசாரின் உதவியுடன் மங்களூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்