அந்நியன் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக இருப்பது உறுதியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது அதிக சர்ச்சைக்கு உள்ளாகி வரும் இயக்குனராக ஷங்கர் மாறியுள்ளார். ஏற்கனவே ‘இந்தியன் 2’ படத்தில் லைக்கா நிறுவனத்திற்கும் அவருக்கும் இடையே பெரிய பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தை கைவிட்டு ஷங்கர் தெலுங்கு பக்கம் சென்றார்.
அங்கு ராம் சரண் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக அறிவித்தார். அதற்கிடையில் தான் இயக்கிய அந்நியன் படத்தை மீண்டும் ஹிந்தியில் உருவாக்கம் செய்ய இருப்பதாகவும் அதில் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் அந்நியன் படத்தின் கதைக்கான உரிமை தன்னிடம் இருப்பதாகவும் தன்னிடம் அனுமதி இல்லாமல் ஷங்கர் இந்தியில் ரீமேக் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த சங்கர் அந்நியன் படத்தின் வசனம் மட்டும் தான் சுஜாதா உடையது, கதை என்னுடையது. எனவே படத்தின் கதையை மீண்டும் எடுக்க யாரிடம் அனுமதி கேட்கத் தேவையில்லை என்று பதிலளித்தார். அதன்பிறகு ரவிச்சந்திரன் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை.
இதற்கிடையில் அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக் உருவாகுமா, இல்லையா? என்று சந்தேகம் இருந்து வந்தது. தற்போது அந்த சந்தேகம் தீர்ந்தது. அந்நியன் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதை அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பென் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளனர்.
பென் ஸ்டுடியோஸ் நிறுவனம் தங்கள் தயாரிப்பில் வெளியாக இருக்கும் படங்களின் பட்டியலை வெளியிட்டனர். அக்ஷய் குமாரின் பெல்பாட்டம், ராஜமௌலியின்ஆர்ஆர்ஆர், ஜான் ஆபிரகாமின் அட்டாக், சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் இந்த படங்கள் வரிசையில் சங்கர், ரன்வீர் சிங் கூட்டணியில் உருவாக இருக்கும் அந்நியன் பட இந்தி ரீமேக்கும் இடம் பெற்றிருந்தது. எனவே அந்நியன் இந்தி ரீமேக் கன்பார்ம்.